ஒரே நாளில் 45 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி


ஒரே நாளில் 45 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 22 Aug 2022 12:13 AM IST (Updated: 22 Aug 2022 12:20 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 45 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

திண்டுக்கல்

தமிழகம் முழுவதும் நேற்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 2,925 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. இந்த முகாம்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் ஆர்வமாக வந்து‌ கொரோனா‌ தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதில் 429 பேருக்கு முதல் தவணையும், 13 ஆயிரத்து 260 பேருக்கு 2-ம் தவணையும், 31 ஆயிரத்து 368 பேருக்கு 3-ம் தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் மூலம் ஒரேநாளில் 45 ஆயிரத்து 57 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டது குறிப்பிடத்தக்கது.


Next Story