வளாகத்தை சுற்றிலும் குப்பை: ஈரோடு மாநகராட்சி அலுவலக கட்டிடத்தில் வளரும் மரங்கள்


வளாகத்தை சுற்றிலும் குப்பை: ஈரோடு மாநகராட்சி அலுவலக கட்டிடத்தில் வளரும் மரங்கள்
x

ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் குப்பை மற்றும் புதர்கள் மண்டிக்கிடக்கும் நிலையில் அலுவலக கட்டிடத்தில் மரங்கள் வளரும் அவல நிலையில் உள்ளது.

ஈரோடு

ஈரோடு

ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் குப்பை மற்றும் புதர்கள் மண்டிக்கிடக்கும் நிலையில் அலுவலக கட்டிடத்தில் மரங்கள் வளரும் அவல நிலையில் உள்ளது.

ஈரோடு மாநகராட்சி

ஈரோடு மாநகராட்சி 60 வார்டுகளுடன் மிகப்பரந்த உள்ளாட்சி அமைப்பாக உள்ளது. 4 மண்டலங்களில் சுமார் 1000 தூய்மை பணியாளர்களை கொண்டு தினசரி தூய்மை பணிகள் செய்யப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகராட்சியில் நடைபெறும் அனைத்து தூய்மை பணிகளும் மாநகராட்சி அலுவலக கட்டிடத்தில்தான் திட்டமிடப்படுகிறது.

மாநகராட்சி ஆணையாளர், 4 மண்டலங்களின் உதவி ஆணையாளர்கள், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், சுகாதார அதிகாரிகள், சுகாதார ஆய்வாளர்கள், மாநகர நல அதிகாரி என்று அனைத்து அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளான மாநகராட்சி மேயர், துணை மேயர், 4 மண்டல தலைவர்கள், 54 கவுன்சிலர்கள் என்று இந்த அலுவலகத்துக்கு தினசரி முக்கிய நபர்கள் வந்து செல்கிறார்கள்.

மரம் வளரும் கட்டிடம்

மாநகராட்சி முழுவதையும் தூய்மை செய்யும் பணியை மேற்கொள்ளும் ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்தின் தலைமை கட்டிடம் தூய்மை என்றால் என்ன என்று கேட்கும் வகையில் இருப்பது பொதுமக்களை முகம் சுழிக்க வைக்கிறது.

ஈரோடு மாநகராட்சி பழைய கட்டிடத்தின் பின்பகுதி, கழிப்பறைகள் அமைந்திருக்கும் கட்டிட பகுதியில் பல்வேறு மரங்கள் வளர்ந்து நிற்கின்றன. வழக்கமாக கட்டிடங்களில் அரச மரங்கள் வளர்வதை பார்த்து இருக்கிறோம். ஆனால் ஈரோடு மாநகராட்சி கட்டிடத்தில் மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பது போன்று ஒவ்வொரு குழாயில் இருந்தும் மரங்கள் முளைத்து வளர்ந்து நிற்கின்றன. ஜன்னல்களில் தேனடைகள், தண்ணீர் தொட்டியை சுற்றி மரக்கன்றுகள் வளர்ந்து உள்ளன.

புதர்

அலுவலக வளாகத்திலேயே காய்ந்து போன மரங்கள் வெட்டப்படாததால், அங்குள்ள கூரையில் சாய்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த பகுதி முழுவதும் புதர் மண்டி, குப்பை கூழமாக உள்ளது. புதிய அலுவலக வளாகமும் குப்பைகள் சேர்ந்து உள்ளன. அலுவலக கட்டிடத்துக்கும், கழிப்பிட பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் குப்பைகள் குவிந்து உள்ளன. கழிப்பிட அறைகளும் சிலந்தி வலை, சுகாதாரம் இல்லாத நிலை என்று காணப்படுகிறது.

அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக இருக்கும் அலுவலகமே இப்படி இருக்கும்போது, மாநகராட்சி மொத்தமும் தூய்மை பணி செய்ய சொன்னால் இவர்கள் எப்படி தூய்மை செய்வார்கள் என்று சமூக ஆர்வலர்கள் வேடிக்கையாக கேட்கிறார்கள்.


Next Story