பஸ்நிலைய கடைகளில் மாநகராட்சி ஆணையாளர் திடீர் ஆய்வு


பஸ்நிலைய கடைகளில் மாநகராட்சி ஆணையாளர் திடீர் ஆய்வு
x

சிங்காநல்லூர் பஸ்நிலைய கடைகளில் ஆணையாளர் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார்

கோயம்புத்தூர்

கோவை

சிங்காநல்லூர் பஸ்நிலைய கடைகளில் ஆணையாளர் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார்.

நூலகம், அறிவுசார் மையம்

கோவை ஆடிஸ் வீதியில் ரூ.2.5 கோடியில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டும் பணியை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர், வாலாங்குளம், உக்கடம் பெரியகுளத்தில் நடைபெறும் பணிகளை பார்வையிட்டு குறிப்பிட்ட காலத்துக்குள் பணியை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து அவர், 61-வது வார்டு சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் ஆய்வு செய்து கையுறை, பாதுகாப்பு உபகரணங் களை பயன்படுத்தவது குறித்து தூய்மை பணியாளர்களுக்கு விழிப்புணர்வு வழங்கினார்.

ஆணையாளர் ஆய்வு

இதையடுத்து சிங்காநல்லூர் பஸ்நிலையத்தில் உள்ள கடைகளில் ஆணையாளர் பிரதாப் ஆய்வு செய்தார். அப்போது, கடைகளில் விற்கப்படும் பொருட்கள் தரமாக இருக்கிறதா? தடை செய்யப் பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளதா? என்று ஆய்வு செய்தார்.

மேலும் அவர், சிங்காநல்லூர் பஸ்நிலையத்தில் உள்ள பொதுக் கழிப்பிடத்தை பார்வையிட்டு காதாரமான முறையில் பராம ரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு அறிவுறுத் தினார்.

குடிநீர் வினியோகம்

அதைத்தொடர்ந்து பட்டத்தரசியம்மன் சாலையில் குடிநீர் வினியோகம் முறையாக உள்ளதா?, தெருவிளக்குகள் ஒளிர்கி றதா? என்று பொதுமக்களிடம் கேட்டறிந்தார். 61-வது வார்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு போடப்படும் தடுப்பூசிகள் குறித்தும் கேட்டறிந்தார். அப்போது மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story