மெரினா கடற்கரையில் 24 மணி நேரமும் இலவச இணைய வசதி வழங்க மாநகராட்சி திட்டம்


மெரினா கடற்கரையில் 24 மணி நேரமும் இலவச இணைய வசதி வழங்க மாநகராட்சி திட்டம்
x
தினத்தந்தி 29 Sep 2022 8:25 AM GMT (Updated: 29 Sep 2022 8:37 AM GMT)

சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரையில் 24 மணி நேர இலவச இணைய சேவை வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

சென்னை,

சென்னை மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் 24 மணி நேர இலவச இணைய சேவை வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகள் சென்னை வாசிகளின் பிரதான பொழுது போக்கு தளமாக விளங்கி வருகிறது.

இந்நிலையில், இந்த கடற்கரைகளில் சுற்றுலா துறையுடன் இணைந்து பொதுமக்களுக்கு இலவச இணையதள சேவை வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக மெரினாவில் 5 இடங்களில் இலவச வைபை நிறுவப்படவுள்ளது.


Next Story