கோனேரிப்பட்டியில் ரூ.25 லட்சத்துக்கு பருத்தி ஏலம்


கோனேரிப்பட்டியில் ரூ.25 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
x
தினத்தந்தி 13 July 2023 12:15 AM IST (Updated: 13 July 2023 4:36 PM IST)
t-max-icont-min-icon

கோனேரிப்பட்டியில் ரூ.25 லட்சத்துக்கு பருத்தி ஏலமிடபட்டது.

சேலம்

தேவூர்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோனேரிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் பருத்தி ஏலம் நடந்தது. இதில், நெடுங்குளம், கல்வடங்கம், குள்ளம்பட்டி, செட்டிபட்டி, ஒக்கிலிப்பட்டி, தண்ணிதாசனூர், செங்கானூர், கொட்டாயூர், பொன்னம்பாளையம், பூதப்பாடி, அம்மாபேட்டை, காவேரிபட்டி, தேவூர், கோனேரிப்பட்டி சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் நாமக்கல், சேலம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டனர். மொத்தம் 1,050 பருத்தி மூட்டைகள் ஏலம் விடப்பட்டது.

இதில் பி.டி. ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு (100 கிலோ) குறைந்தபட்ச விலையாக ரூ.5 ஆயிரத்து 800 முதல் அதிகபட்ச விலையாக ரூ.6 ஆயிரத்து 599 வரை ஏலம் போனது. மொத்தம் 1,050 பருத்தி மூட்டைகள் ரூ.25 லட்சத்துக்கு ஏலம் போனது.


Next Story