ரூ.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
கொங்கணாபுரத்தில் ரூ.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.
சேலம்
எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வேளாண் விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. சுமார் 2 ஆயிரத்து 100 பருத்தி மூட்டைகள், 650 லாட்டுக்களாக பிரிக்கப்பட்டு, கூட்டுறவு துறை அலுவலர்கள் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது. இதில் பி.டி. ரக பருத்தி குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 900 முதல் ரூ.9 ஆயிரத்து 669 வரையிலும், கொட்டு ரக பருத்தி குவிண்டால் ரூ.2 ஆயிரத்து 700 முதல் ரூ.4 ஆயிரத்து 450 வரையிலும் விற்பனையானது. மொத்தம் 2 ஆயிரத்து 100 மூட்டை பருத்தி ரூ.50 லட்சத்துக்கு ஏலம் போனது. அடுத்த ஏலம் வருகிற 26-ந் தேதி நடைபெறும் என்று கூட்டுறவு சங்க அலுவலர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story