அரூர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.62 லட்சத்திற்கு பருத்தி ஏலம்


அரூர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.62 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
x
தினத்தந்தி 27 Jun 2023 1:15 AM IST (Updated: 27 Jun 2023 12:47 PM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

அரூர்

அரூர் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. அரூர், கம்பைநல்லூர், கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் 2324 மூட்டை பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்தனர். பி.சி. ரக பருத்தி குவிண்டால் ரூ.5,819 முதல் ரூ.6,700 வரை ஏலம் போனது. கூட்டுறவு சங்கத்தில் ரூ.62 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனதாக சங்க செயலர் அறிவழகன் தெரிவித்தார்.


Next Story