எடப்பாடியில் ரூ.90 லட்சத்திற்கு பருத்தி ஏலம்


எடப்பாடியில் ரூ.90 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
x

எடப்பாடியில் ரூ.90 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது.

சேலம்

எடப்பாடி:

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த வெள்ளரி வெள்ளி பகுதியில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் பருத்தி விற்பனைக்கான பொது ஏலம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று இந்த மையத்தில் நடைபெற்ற பொது ஏலத்தில் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்த சுமார் 3,145 பருத்தி மூட்டைகள் ரூ.90 லட்சத்திற்கு ஏலம் போனது. இதில் பருத்தி வகைகள் குறைந்தபட்சமாக குவிண்டால் ரூ.6,900 முதல் அதிகபட்சமாக ரூ.7,697 வரை விற்பனையானது. அனைத்து ரக பருத்திகளும் கடந்த வாரத்தை விட குவிண்டால் ரூ.100 வரை விலை உயர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.


Next Story