கொங்கணாபுரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.40 கோடிக்கு பருத்தி ஏலம்
கொங்கணாபுரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.40 கோடிக்கு பருத்தி ஏலம்போனது.
எடப்பாடி
கொங்கணாபுரம் வேளாண் கூட்டுறவு சங்கத்தில் பருத்தி ஏலம் நடந்தது. சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்த சுமார் 5 ஆயிரத்து 850 பருத்தி மூட்டைகள் 680 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு பொது ஏலம் விடப்பட்டது. இதில் பி.டி. ரக பருத்தியானது குவிண்டால் ஒன்றுக்கு (100 கிலோ) ரூ.5 ஆயிரத்து 850 முதல் ரூ.6 ஆயிரத்து 799 வரை விற்பனையானது.
இந்த மையத்தில் நாள் முழுவதும் நடைபெற்ற பொது ஏலத்தின் மூலம் ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்பிலான பருத்தி ஏலம் போனது. நடைபெற்றது. தொடர்ந்து எள் ஏலம் நடைபெற்றது. இதில் வெள்ளை ரக எள் கிலோ ஒன்றுக்கு ரூ.146 முதல் ரூ.163.50 வரையிலும், சிவப்பு ரகம் எள் கிலோ ஒன்றுக்கு ரூ.133 முதல் ரூ.162.50 வரை விற்பனையானது. ஏலத்தில் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்த 110 மூட்டை எள் ரூ.12 லட்சத்துக்கு ஏலம் போனது.