மயிலாடுதுறை அருகே பருத்தி ஏலம்


மயிலாடுதுறை அருகே பருத்தி ஏலம்
x

மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை திறந்தவெளி கிடங்கில் நடந்த பருத்தி ஏலத்தில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7 ஆயிரத்து 489-க்கு விலைபோனது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை;

மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை திறந்தவெளி கிடங்கில் நடந்த பருத்தி ஏலத்தில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7 ஆயிரத்து 489-க்கு விலைபோனது.

பருத்தி ஏலம்

மயிலாடுதுறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டையில் உள்ள திறந்தவெளி கிடங்கில் விவசாயிகளிடம் இருந்து பருத்தி கொள்முதல் செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டது.ஏலத்தினை மயிலாடுதுறை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாள விநாயகமூர்த்தி அறிவுறுத்தலின் பேரில், கூட்டுறவு சங்கங்களின் மேலாண்மை இயக்குனர் மணிகண்டன் மற்றும் அலுவலர்கள் நடத்தினர். ஏலத்தில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7 ஆயிரத்து 489-க்கும், குறைந்த பட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7 ஆயிரத்து309-க்கும் விலை போனது. மொத்தம் 330 குவிண்டால் பருத்தி ரூ.24 லட்சத்து 42 ஆயிரத்துக்கு ஏலம் போனது.

ஒவ்வொரு வாரமும்

வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மதியம் 2 மணிக்கு சோழம்பேட்டை திறந்தவெளி கிடங்கில் பருத்தி ஏலம் விடப்படும். மயிலாடுதுறை பகுதியில் உள்ள அனைத்து பருத்தி விவசாயிகளும் ஏலத்தில் கலந்துகொள்ளலாம் என்று கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story