ரூ.1.76 கோடிக்கு பருத்தி விற்பனை
கும்பகோணத்தில் நடந்த ஏலத்தில் ரூ.1.76 கோடிக்கு பருத்தி விற்பனை செய்யப்பட்டது.
கும்பகோணம்;
கும்பகோணத்தில் நடந்த ஏலத்தில் ரூ.1.76 கோடிக்கு பருத்தி விற்பனை செய்யப்பட்டது.
பருத்தி ஏலம்
கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நேற்று நடைபெற்றது. விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பிரியாமாலினி தலைமையில், நடந்த ஏலத்தில் கும்பகோணத்தை சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து பருத்தி விவசாயிகள் 2 ஆயிரத்து 400 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு எடுத்து வந்தனர்.
ரூ.1.76 கோடிக்கு விற்பனை
கும்பகோணம், பண்ரூட்டி, விழுப்புரம் சேலம், தேனி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 10 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டு பருத்தியை ஏலம் எடுத்தனர்.இதில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7 ஆயிரத்து 689-க்கும், குறைந்தபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7 ஆயிரத்து 99-க்கும் விலை போனது. இந்த ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட பருத்தியின் மதிப்பு சராசரியாக ரூ.1.76 கோடி என ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலர்கள் தெரிவித்தனர்.