ராசிபுரத்தில்ரூ.70 லட்சத்திற்கு பருத்தி ஏலம்


ராசிபுரத்தில்ரூ.70 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
x
தினத்தந்தி 6 Feb 2023 7:00 PM GMT (Updated: 6 Feb 2023 7:00 PM GMT)
நாமக்கல்

ராசிபுரம்:

ராசிபுரத்தில் நடந்த ஏலத்தில் ரூ.70 லட்சத்துக்கு பருத்தி விற்பனை ஆனது.

பருத்தி ஏலம்

ராசிபுரம் அருகே பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்க கிளை வளாகத்தில் பருத்தி ஏலம் நடந்தது. முத்துக்காளிப்பட்டி, மசக்காளிபட்டி, கவுண்டம்பாளையம், சந்திரசேகரபுரம், அணைப்பாளையம், பாச்சல், மின்னக்கல், சிங்களாந்தபுரம், முருங்கபட்டி, குருசாமி பாளையம், அம்மாபாளையம் உள்பட தாலுகா முழுவதும் இருந்து விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து ஏலத்தில் கலந்து கொண்டனர். இந்த நிலையில் நடந்த இந்த ஏலத்தில் 2,698 பருத்தி மூட்டைகள் ரூ.70 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.

விவசாயிகள் கவலை

இந்த ஏலத்தில் ஆர்.சி.எச். ரக பருத்தி 2,435 மூட்டைகளும், டி.சி.எச். ரக பருத்தி 205 மூட்டைகளும், கொட்டு பருத்தி 58 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் ஆர்.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.7,569-க்கும், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.8,444-க்கும், டி.சி.எச். ரக பருத்தி குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.7,869-க்கும், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.8,650-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.5390 முதல் அதிகபட்சமாக ரூ.6,669-க்கும் ஏலம் விடப்பட்டது.

கடந்த வாரத்தை விட இந்த வாரம் குறைந்த அளவில் பருத்தியை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். விலையும் குறைந்து காணப்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.


Next Story