அ.தி.மு.க.- த.மா.கா. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
பத்திரப்பதிவு கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து பட்டுக்கோட்டை நகரசபை கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க.- த.மா.கா. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனா்.
பட்டுக்கோட்டை;
பத்திரப்பதிவு கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து பட்டுக்கோட்டை நகரசபை கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க.- த.மா.கா. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனா்.
நகரசபை கூட்டம்
பட்டுக்கோட்டை நகரசபை கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவர் சண்முகப்பிரியா தலைமை தாங்கினார். ஆணையர் குமரன் துணைத்தலைவர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதன் விவரம் வருமாறு:-ஜவகர்பாபு (அ.தி.மு.க) : விலைவாசி உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வைக் கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம். அவரைத் தொடர்ந்து அ.தி.மு.க., த.மா.கா. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் அவர்கள் சிறிது நேரத்தில் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.ரவிக்குமார் (தி.மு.க) :எனது வார்டில் பள்ளிகளின் சுற்றுச்சுவரை உயர்த்தி தர வேண்டும்.குமார் (தி.மு.க.) : காளியம்மன் கோவில் தெருவில் சாக்கடை கழிவு நீரை அகற்ற வேண்டும்.
ஆணைவிழுந்தான் குளம்
ரகுராமன் (தி.மு.க.) : தார்ச்சாலை அமைக்கும் போது பழைய தாரை அகற்றிவிட்டு சுத்தம் செய்து புதிதாக அமைக்க வேண்டும். நாடியம்மன் கோவில் குளம் தூர்வாரும் பணி பல மாதங்களாக மந்தமாக நடைபெற்று வருகிறது.குமணன் (அ.தி.மு.க.) :எனது வார்டில் பூங்கா பணிகளை முடிக்கவும் துப்புரவு பணிகள் சரியாக நடைபெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முத்துசாமி (தி.மு.க.) : எனது வார்டில் தெருவிளக்குப் பிரச்சினைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஜெயராமன் (அ.தி.மு.க.) :ஆனைவிழுந்தான் குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.நளினி கோபி (அ.தி.மு.க.) : சாலைகளில் திரியும் மாடுகளை பிடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்துல் கலாம் நகர், மன்னை நகரில் சாலை அமைக்க வேண்டும்.இவ்வாறு கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.