அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு


அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு
x

கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தஞ்சாவூர்

கும்பகோணம்;

கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மாநகராட்சி கூட்டம்

கும்பகோணம் மாநகராட்சி கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் நடந்தது. துணை மேயர் சு.ப. தமிழழகன், மாநகராட்சி ஆணையர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கும்பகோணத்தில் 40-வது வார்டில் பூங்காவை இடித்துவிட்டு மண்டல அலுவலகம் கட்ட முயற்சி செய்வதை தடுக்க கோரி பேச அ.தி.மு.க. கவுன்சிலர் ஆதிலட்சுமி கோரிக்கை விடுத்தார்.

வெளிநடப்பு

அப்போது குறுக்கிட்ட துணை மேயர் சு.ப.தமிழழகன் உங்களுடைய கேள்விக்கு பதில் சொல்ல எங்களை பேச விடுங்கள். பிறகு தங்களுக்கு பேசுவதற்கு அனுமதி வழங்கப்படும் என பதில் அளித்தார். ஒரு முக்கிய பிரச்சினை பற்றி விவாதிக்க அனுமதி கூறினால் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகு அனுமதி வழங்குவீர்களா? பொதுமக்கள் பிரச்சினை பற்றி எனக்கு வாய்ப்பு அளிக்காததை கண்டித்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்கிறோம் என ஆதிலட்சுமி கூறி மன்றத்தை விட்டு வெளிநடப்பு செய்தார். இதைத் தொடர்ந்து ஆதிலட்சுமிக்கு ஆதரவாக அ.தி.மு.க. உறுப்பினர் பத்ம.குமரேசன் துணை மேயருடன் பேசினார்.

கண்டனம்

அப்போது துணை மேயர் சுப.தமிழழகன், பத்ம. குமரேசனிடம் நீங்கள் உங்களது கட்சி உறுப்பினர்களின் முடிவை மதிக்காமல் என்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறீர்கள். நீங்கள் உங்கள் கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறீர்களா? இல்லையா? என முடிவு செய்துவிட்டு எங்களோடு விவாதத்துக்கு வாருங்கள் என கூறினார்.இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.பத்ம குமரேசனின் பேச்சுக்கு தி.மு.க. கவுன்சிலர்கள் குட்டி தட்சிணாமூர்த்தி, முருகன், ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பேசிய பத்மகுமரேசன் கட்சி கட்டுப்பாடு என பேசி விவாதத்துக்கு பதில் கூறாமல் பிரச்சினையை திசை திருப்பும் செயல் வருத்தம் அளிக்கிறது எனக்கூறி அவரும் வெளிநடப்பு செய்தார்.இதனால் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.


Next Story