3-வது நாளாக நீடித்த கவுன்சிலர்கள் போராட்டம் வாபஸ்


3-வது நாளாக நீடித்த கவுன்சிலர்கள் போராட்டம் வாபஸ்
x

குளச்சல் நகராட்சியில் 3-வது நாளாக நீடித்த கவுன்சிலர்கள் போராட்டம் வாபஸ்

கன்னியாகுமரி

குளச்சல்,

குளச்சல் நகர்மன்ற சாதாரணக்கூட்டம் தலைவர் நசீர் தலைமையில் 31-ந் தேதி நடந்தது. இதில் கவுன்சிலர் ரமேஷ் (காங்கிரஸ்), தி.மு.க. கவுன்சிலர்கள் ரகீம், ஜான்சன் ஆகியோர் ஆணையரை மாற்ற வேண்டும் என பேசினர். இதற்கு கவுன்சிலர் அஜின்ரூத் (தி.மு.க.) எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனால் கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து ரமேஷ், ரகீம், ஜான்சன் உள்பட 14 கவுன்சிலர்கள் மன்ற கூடத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போராட்டத்தில் தீர்வு ஏற்படாததால் அவர்கள் நேற்று முன்தினம் கருப்பு சட்டை அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நேற்று 3-வது நாளாக தொடர்ந்தது. இந்தநிலையில் நேற்று மதியம் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் (திருநெல்வேலி) விஜயலட்சுமி மற்றும் மண்டல பொறியாளர்கள் குளச்சல் நகராட்சிக்கு வந்து கவுன்சிலர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் அவர்களின் கோரிக்கை அறிக்கையாக உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து கவுன்சிலர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.


Next Story