மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் - திட்டப்பணிகள் நடைபெறவில்லை என கவுன்சிலர்கள் புகார்


மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் - திட்டப்பணிகள் நடைபெறவில்லை என கவுன்சிலர்கள் புகார்
x

மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமில் திட்டப்பணிகள் நடைபெறவில்லை என கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.

மதுரை

திருப்பரங்குன்றம்,


மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்நடைபெற்றது. முகாமில் திட்டப்பணிகள் நடைபெறவில்லை என கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.

குறைதீர்க்கும் முகாம்

திருப்பரங்குன்றத்தில் உள்ள மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு மண்டல தலைவர் சுவிதாவிமல் தலைமை தாங்கினார். துணை மேயர் நாகராஜன், உதவி ஆணையர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் சிறப்பு அழைப்பாளர்களாக மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, மாநகராட்சி கமிஷனர் பிரவீன்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கினர். இதில் தி.மு.க.வை சேர்ந்த மாநகராட்சி கவுன்சிலர்கள் இந்திராகாந்தி, ரவிச்சந்திரன், கருப்பசாமி, சிவசக்தி, ரமேஷ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கவுன்சிலர் விஜயா, காங்கிரஸ் கவுன்சிலர் ஸ்வேதா, சத்யன்ஜெரார்டு ஆகியோர் மேயர் மற்றும் கமிஷனரிடம் தங்கள் மக்கள் பிரதிநிதிகளாக பதவி ஏற்று ஒரு ஆண்டுகளுக்கு மேலாகியும் ஒரு திட்டபணியும் நடக்கவில்லை.தங்களது வார்டுகளில் தெருவிளக்குகள் எரியாத நிலையில் இருளில் மூழ்குகிறது. இதுகுறித்து மண்டல குழு கூட்டத்தில் பேசியும், பலமுறை மனுக்கள் கொடுத்தும் பலன் இல்லை. பள்ளிகளில் மாணவிகளுக்கு குடிநீர் வசதி இல்லை. தூய்மை பணியாளர்களுக்கு கை உறைகள், உபகரணங்கள், வாகனங்கள் இல்லை. புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி முறையிட்டனர்.

மனு

இந்த நிலையில் தி.மு.க. வட்ட செயலாளர் சுந்தராஜன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் மற்றும் நடைப்பயிற்சி கழகத்தினர் திரண்டு வந்து மேயரிடம் மனு கொடுத்தனர். அதில் பேரறிஞர் அண்ணா பெயரில் உள்ள பூங்கா சீரமைக்கப்படாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே பூங்காவில் நடைபாதை, கழிப்பறை சீரமைக்கப்படவேண்டும் என்று கூறினர். இதற்கு கமிஷனர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.


Next Story