பெண்ணை தாக்கிய கள்ளக்காதலன் கைது
பெண்ணை தாக்கிய கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலக்குறிச்சியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி சரண்யா (வயது 35). கூலி தொழிலாளி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிகிறது. இதற்கிடையில் சரண்யாவுக்கு அதே பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் (36) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து சரண்யாவும், புஷ்பராஜ் பிரிந்தனர். இந்த நிலையில் அப்பாச்சி என்பவருடன் சரண்யா பழகி வந்ததாக தெரிகிறது. இது புஷ்பராஜீக்கு பிடிக்கவில்லை.
சம்பவத்தன்று சரண்யா வீட்டின் முன் நின்று அப்பாச்சியுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த புஷ்பராஜ் தகாத வார்த்தைகள் திட்டி சரண்யாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆழியார் போலீஸ் நிலையத்தில் சரண்யா புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து புஷ்பராஜை கைது செய்தனர்.
இதற்கிடையில் தனது சித்தப்பா புஷ்பராஜிடம் தகராறு செய்ததை பூபதி என்பவர் தட்டிக் கேட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பாச்சி (35), விஜிஸ் (27) ஆகியோர் சேர்ந்து பூபதியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரில் பேரில் வழக்குபதிவு செய்து அப்பாச்சி, விஜிஸ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.