எண்ணும் எழுத்தும் திட்டம்: "எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்" ஒளவையார் பாடலை மேற்கோள் காட்டி மு.க.ஸ்டாலின் உரை


எண்ணும் எழுத்தும் திட்டம்: எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் ஒளவையார் பாடலை மேற்கோள் காட்டி மு.க.ஸ்டாலின் உரை
x
தினத்தந்தி 13 Jun 2022 11:16 AM IST (Updated: 13 Jun 2022 12:06 PM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 1-5 வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை,

மாணவர்களுக்கான கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்படுகிறது. எண்ணும் எழுத்தும் திட்டத்திற்காக 30,000 ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த கல்வியாண்டு முதல், 2025ம் ஆண்டுக்குள் 8 வயதுக்குட்பட்ட அனைத்து மாணவர்களும் புரிந்துணர்வுடன் படிக்கவும் அடிப்படை கணித திறன்களை கெண்டிருப்பதை உறுதி செய்யவும், 'எண்ணும் எழுத்தும்' எனும் திட்டத்தை கல்வித்துறை கொண்டுவந்துள்ளது.

கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கவுள்ள நிலையில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.

இதைதொடா்ந்து திருவள்ளுா், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காலை 10 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அரசு பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கி வைத்த பின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்ற ஒளவையார் பாடலை மேற்கோள் காட்டி உரையாற்றினார். தாகத்தை தீர்க்கும் நீர் போல கல்வி தாகத்தை தீர்க்க எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. எண்ணும் எழுத்தும் மூலம் குழந்தைகளின் எதிர்காலம் ஏற்றமடையும். ஆசிரியர்களின் கருத்து கேட்கப்பட்டு எண்ணும் எழுத்தும் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எளிமையான வகையில் பயிற்சி வகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. தொடக்க கல்வி என்பது சமூகத்தின் திறவுகோல். 8 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் எண்ணறிவு, எழுத்தறிவு பெற வேண்டும் என்பதே நோக்கம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திட்டம் தொடா்பான வீடியோ, கைபேசி செயலி, திட்டப்பாடல் ஆகியவற்றை வெளியிட்டார். ஆசிாியா் கையேடு, சான்றிதழ், கற்றல் கற்பித்தல் உபகரணம், புத்தகங்கள் ஆகியவற்றையும் முதல்-அமைச்சா் வழங்கினார்.


Next Story