ஆசிரியர்களுக்கு எண்ணும்-எழுத்தும் பயிற்சி


ஆசிரியர்களுக்கு எண்ணும்-எழுத்தும் பயிற்சி
x

ஆசிரியர்களுக்கு எண்ணும்-எழுத்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, வேப்பூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரிய-ஆசிரியைகளுக்கு தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவின்படி மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் எண்ணும்-எழுத்தும் பயிற்சி நேற்று தொடங்கியது. பெரம்பலூர் ஒன்றியத்துக்கு பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், வேப்பந்தட்டை ஒன்றியத்துக்கு எசனை அரசு மேல்நிலைப்பள்ளிலும், வேப்பூர் ஒன்றியத்துக்கு குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஆலத்தூர் ஒன்றியத்துக்கு பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் நடந்தது. எண்ணும், எழுத்தும் பயிற்சியை பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் தொடங்கி வைத்தார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் உதவி திட்ட அலுவலர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். 551 ஆசிரிய-ஆசிரியைகளுக்கு பயிற்றுனர்கள் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வருகிற 10-ந் தேதி வரை நடக்கிறது.


Next Story