நல்லம்பள்ளி அருகேவனப்பகுதியில் கேட்பாரற்று கிடந்த 2 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல்


நல்லம்பள்ளி அருகேவனப்பகுதியில் கேட்பாரற்று கிடந்த 2 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 29 Dec 2022 6:45 PM GMT (Updated: 29 Dec 2022 6:45 PM GMT)
தர்மபுரி

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே முத்துகோம்பை பகுதியில் உள்ள புளியமரத்து வனப்பகுதியில் கேட்பாரற்று 2 நாட்டுத்துப்பாக்கிகள் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் 2 நாட்டுத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். பின்னர் இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) கிருஷ்ணன் கொடுத்த புகாரின்பேரில் தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வனப்பகுதியில் நாட்டுத்துப்பாக்கிகளை வீசி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story