டீக்கடையில் மது விற்ற தம்பதி கைது


டீக்கடையில் மது விற்ற தம்பதி கைது
x

விக்கிரமங்கலம் அருகே டீக்கடையில் மது விற்ற தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் சாத்தம்பாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு டீக்கடையில் மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி அங்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு மதுபாட்டில்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சாத்தம்பாடி மெயின் ரோட்டை சேர்ந்த தேவேந்திரன் (வயது 55), அவரது மனைவி வேம்பு (49) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story