கண்பார்வை இழந்தவருக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு


கண்பார்வை இழந்தவருக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு
x

கண்பார்வை இழந்தவருக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ராஜபாளையம் அருகே உள்ளது, சோழபுரம். அந்த பகுதியைச் சேர்ந்தவர் மூக்கையா. இவரது மகனுக்கு 5 வயதாக இருக்கும்போது தளவாய்புரம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த 1.12.2002 அன்று நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் கண் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர்கடந்த 4.12.2002 அன்று மதுரையில் வலது கண் அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. டாக்டரின் கவனக்குறைவு காரணமாகவும் அஜாக்கிரதை காரணமாகவும் கண் பார்வை பறிபோனது. இதற்கிடையே 1.12.2012 அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் நஷ்ட ஈடு கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான இறுதி விசாரணை 21.6.2022 எடுக்கப்பட்டது. இந்த நிலையில் நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி சேகர் மற்றும் உறுப்பினர்கள் சவுந்தரராஜன் மற்றும் சாந்தி ஆண்டியப்பன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் கண்பார்வை முழுவதும் இழப்பிற்கு காரணமான மதுரையில் உள்ள ஒரு கண் மருத்துவமனை ரூ. 8 லட்சம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும். மேலும் 12 சதவீதம் வட்டியுடன் தாக்கல் செய்த நாள் முதல் பணம் செலுத்தும் வரை கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல், மனவேதனை, அலை கழிப்பிற்காக ரூ. 2 லட்சம், வழக்கு செலவு தொகை ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.


Next Story