அரசின் நிர்வாக செயல்பாடுகள் அனைத்திலும் கோர்ட்டு தலையிட முடியாது


அரசின் நிர்வாக செயல்பாடுகள் அனைத்திலும் கோர்ட்டு தலையிட முடியாது
x

அரசின் நிர்வாக செயல்பாடுகள் அனைத்திலும் கோர்ட்டு தலையிட முடியாது என்றும், பொதுநல வழக்கு என்ற பெயரில் கோர்ட்டின் மாண்பை குறைக்க வேண்டாம் எனவும், மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்

மதுரை


அரசின் நிர்வாக செயல்பாடுகள் அனைத்திலும் கோர்ட்டு தலையிட முடியாது என்றும், பொதுநல வழக்கு என்ற பெயரில் கோர்ட்டின் மாண்பை குறைக்க வேண்டாம் எனவும், மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

கோரிக்கை வழக்குகள்

கல்குவாரிக்கு அனுமதி வழங்க கோருவது, ஆக்கிரமிப்பை அகற்றுவது, சாலை அமைப்பது மற்றும் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று தனித்தனியாக பல்வேறு வழக்குகள் பொது நல வழக்குகளாக தாக்கல் செய்யப்பட்டு மதுரை ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்தன.

இந்த வழக்குகள் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், கோர்ட்டு என்பது நீதி பரிபாலனம் நடக்கக்கூடிய இடம். இங்கு சாலை அமைக்க கோருவது, கழிவறை கட்ட உத்தரவிட வழக்கு தாக்கல் செய்வது போன்றவற்றை விசாரித்து உத்தரவு பிறப்பிப்பது கோர்ட்டின் பணி இல்லை.

மாண்பை குறைக்க வேண்டாம்

கோரிக்கைகளை நிறைவேற்ற கோரினால் அது பொதுநல வழக்கு ஆகாது. மேலும் அரசின் நிர்வாக பணிகளிலும், இதுதொடர்பான விவகாரங்களிலும் கோர்ட்டு தலையிட முடியாது. இதுபோன்ற கோரிக்கைகளை நிறைவேற்றும்படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளை அணுகலாம். அதுமட்டுமல்லாமல் இதுபோன்ற பொதுநல வழக்குகள் என்ற பெயரில் கோர்ட்டின் நேரத்தை வீணாக்கவும், கோர்ட்டின் மாண்பை குறைக்கவும் வேண்டாம் என நீதிபதிகள் வலியுறுத்தி, வழக்குகளை முடித்து வைத்தனர்.


Next Story