கேபிள் டி.வி. ஆபரேட்டருக்கு ஆயுள் தண்டனை


கேபிள் டி.வி. ஆபரேட்டருக்கு ஆயுள் தண்டனை
x

கேபிள் டி.வி. ஆபரேட்டருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

மதுரை


மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழவளவு பகுதியை சேர்ந்தவர் முருகன் என்ற சுப்பையா. கேபிள் டி.வி. ஆபரேட்டர். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். முருகன் மதுவுக்கு அடிமையாகி இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மது போதையில் தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அவரை மண்எண்ணையை ஊற்றி தீ வைத்தார்.

இதில் படுகாயம் அடைந்த செல்வி இறந்துவிட்டார். இதுகுறித்து கீழவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு வக்கீல் காவேரி சாந்தி ஆஜரானார்.

வழக்கு விசாரணை முடிவில், முருகன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிபதி கிருபாகரன் மதுரம் நேற்று தீர்ப்பளித்தார்.


Next Story