தந்தை, மகன் மீது வழக்குப்பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவு


தந்தை, மகன் மீது வழக்குப்பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவு
x

தந்தை, மகன் மீது வழக்குப்பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

ராமநாதபுரம்

பரமக்குடி,

இளையாங்குடி தாலுகா பெருமச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மோட்ச அலங்காரம் (வயது57). இவர் தனது மகன் அந்தோணி ஆரோக்கிய செபஸ்டியனை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்ப பரமக்குடி சக்தி நகரைச் சேர்ந்த அருண்குமார் (48), அவரது தந்தை அன்னசாமி (67) ஆகியோரிடம் ரூ. 6 லட்சத்து 30 ஆயிரம் கொடுத்துள்ளார். பின்பு அந்தோணியை அவர்கள் டூரிஸ்ட் விசாவில் வெளி நாட்டிற்கு அனுப்பி உள்ளனர். அங்கு சென்ற சில நாட்களிலேயே அவர் வந்தது டூரிஸ்ட் விசா என கூறி அந்நாட்டில் இருந்து சொந்த ஊரான பரமக்குடிக்கு திருப்பி அனுப்பி உள்ளனர். உடனே அவர் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். உடனே ரூ.3 லட்சத்து4 ஆயிரத்தை கொடுத்துள்ளனர். மீதி பணத்தை 2 மாதத்தில் கொடுப்பதாக கூறியவர்கள் கொடுக்காமல் இழுத்து அடித்துள்ளனர். உடனே அவர் இதுகுறித்து பரமக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.வழக்கை விசாரித்த நீதிபதி தந்தை. மகன் இருவர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன்படி பரமக்குடி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


Next Story