அறங்காவலர் பதவிக்கான விண்ணப்பம் இணையதளங்களில் அறநிலையத்துறை வெளியிட ஐகோர்ட்டு உத்தரவு


அறங்காவலர் பதவிக்கான விண்ணப்பம் இணையதளங்களில் அறநிலையத்துறை வெளியிட ஐகோர்ட்டு உத்தரவு
x

அறங்காவலர் பதவிக்கான விண்ணப்பம் இணையதளங்களில் அறநிலையத்துறை வெளியிட ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது,



சென்னை,

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, 'கோவில் அறங்காவலர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்களில் அரசியல் தொடர்பு குறித்த கேள்வி சேர்க்கப்பட்டுவிட்டது. பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அறங்காவலர் பணிக்கான விண்ணப்பங்களை இணையதளங்களில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 10 மாவட்டங்களில் அறங்காவலர்கள் தேர்வுக்கான மாவட்ட வாரியான தேர்வுக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன' என்று அறநிலையத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதையடுத்து, மீதமுள்ள மாவட்டங்களில் விரைவில் குழுக்கள் அமைக்க வேண்டும். அறங்காவலர் தேர்வுக்கான விண்ணப்பங்களை பிப்ரவரி 8-ந்தேதிக்குள் இணையதளங்களில் வெளியிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை பிப்ரவரி 8-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.


Next Story