பொதுக்குழு செல்லும் என ஐகோர்ட்டு தீர்ப்பு: அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்


பொதுக்குழு செல்லும் என ஐகோர்ட்டு தீர்ப்பு: அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
x

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

மதுரை

திருப்பரங்குன்றம்

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

திருப்பரங்குன்றம்

அ.தி.மு.க.பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்ததையெரட்டி திருப்பரங்குன்றத்தில் நேற்று மதுரை புறநகர் அ.தி.மு.க. கிழக்கு மாவட்டம் சார்பில் அமைப்புசெயலாளரும் மாவட்ட செயலாளருமான ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. உத்தரவின்படி பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். நிகழ்ச்சிக்கு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி மாவட்ட செயலாளரும், திருப்பரங்குன்றம் பகுதி செயலாளருமான வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றியசெயலாளர் நிலையூர் முருகன் ஆகியோர் தலைமை தாங்கி அரசு பஸ்களிலும், ஆட்டோக்களிலும் வந்த பயணிகளுக்கு இனிப்பு வழங்கினார்கள். நிகழ்ச்சியில் அவைத்தலைவர் சொ.ராசு வட்ட செயலாளர் நாகரத்தினம், திருநகர்பாலமுருகன், ராஜ்குமார், எம்.ஆர்.குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வாடிப்பட்டி

வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் வி.எம்.காளிதாஸ் தலைமை தாங்கி இனிப்பு வழஙகினார். ராமையம்பட்டி ஜெயராம், குட்லாடம்பட்டி சுந்தர்ராஜன், கட்டக்குளம் வி.எஸ.பாண்டியன், பிரசன்னா, கச்சைகட்டி பிச்சைமுத்து, அழகர், கோட்டைமேடு பாலன், மருதமுத்து, ஆட்டோ ராஜா, விராலிப்பட்டி பவானி கருப்பு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம், விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குமாரம் சாலைபிரிவு

முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் உத்தரவு இணங்க மதுரை மேற்கு தெற்கு ஒன்றியம் அ.தி.மு.க. சார்பில் குமாரம் சாலை பிரிவில் ஒன்றிய பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமையில் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில் கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உசிலம்பட்டி

உசிலம்பட்டி தேவர்சிலை முன்பு அ.தி.மு.க. நகரச்செயலாளர் பூமாராஜா தலைமையில் மாநில ஜெயலலிதா பேரவை துணைச்செயலாளர் துரைதனராஜன், வக்கீல்கள் பி.லட்சுமணன், எஸ்.கதிரவன், முன்னாள் கவுன்சிலர் வேல்காட், உக்கிரபாண்டி ஆகியோர் முன்னிலையில் ராமமூர்த்தி, ராஜாதனிக்கொடி ராஜபாண்டி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், எடப்பாடியார் வாழ்க என கோஷங்கள் எழுப்பியும் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

சோழவந்தான்

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர்கணேசன் தலைமையில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி ஒன்றிய தலைவர் மகாலட்சுமி ராஜேஷ்கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலாஜெயக்குமார், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், முன்னாள் சேர்மன் எம்.கே. முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர் ரேகா ராமச்சந்திரன், சண்முகபாண்டிராஜா, கணேசன், இளைஞர் அணி கேபிள்மணி, மருத்துவர் அணி கருப்பையா, மாணவரணி விஜய்பாபு, நிர்வாகிகள் பி.ஆர்.சி நாகராஜன், ராமலிங்கம், மணிகண்டன், தியாகு, அசோக், சங்கையா, கென்னடி உள்பட அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கினர்.


Next Story