குற்றாலத்தில் களைகட்டிய சீசன் - நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்த சுற்றுலா பயணிகள்


குற்றாலத்தில் களைகட்டிய சீசன் - நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்த சுற்றுலா பயணிகள்
x

குற்றாலத்தில் சீசன் களைகட்டி உள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் மிகவும் நன்றாக உள்ளது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டிவருகின்றது.

இந்த நிலையில் இன்று விடுமுறை நாள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்து அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்ததால் அனைத்து அருவிகளிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர்.

இதனால் பெரும்பாலான விடுதிகள் அனைத்தும் நிரம்பி காணப்பட்டது. அடிக்கடி ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை போலீசார் அவ்வப்போது இதனை சீர் செய்தனர்.


Next Story