கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்பு


கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-24T00:17:01+05:30)
நாமக்கல்

வெண்ணந்தூர்:

வெண்ணந்தூர் அடுத்த அத்தனூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் தனது விவசாய நிலத்தில் 5-க்கும் மேற்பட்ட பசுமாடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் பிரபு நேற்று மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். பின்னர் மாலையில் மேய்ச்சலுக்கு சென்ற மாடுகளை அழைத்து செல்ல சென்றார்.

அப்போது மேய்ச்சலுக்கு சென்ற மாடுகளில் ஒரு பசு காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவரது விவசாய கிணற்றில் பசுமாடு தவறி விழுந்து நீண்ட நேரமாக உயிருக்கு போராடியது. இதையடுத்து ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் பலகார ராமசாமி தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 20 நிமிடங்களில் பசுமாட்டை உயிருடன் மீட்டனர். துரிதமாக செயல்பட்டு பசுமாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினரை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.


Next Story