மாட்டு வண்டி பந்தயம்


மாட்டு வண்டி பந்தயம்
x

பில்லமங்கலம், கூகனூரில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

திருமயம்:

மாட்டு வண்டி பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே பில்லமங்கலம் பொன்னழகி அம்மன் கோவில் வைகாசி தேர் திருவிழாவை முன்னிட்டு நேற்று மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 23 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பந்தயமானது பெரிய மாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவாக நடைபெற்றது. முதலாவதாக நடைபெற்ற பெரியமாடு பிரிவில் 9 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

இதில் முதல் பரிசை கொத்தரி சீமான் செந்தூர் பாண்டி மாட்டு வண்டியும், 2-வது பரிசை மதகுபட்டி வெள்ளை கண்ணு மாட்டு வண்டியும், 3-வது பரிசை திருமயம் கோட்டை முனீஸ்வரர் மாட்டு வண்டியும், 4-வது பரிசை கே.புதுப்பட்டி அம்பாள் மாட்டு வண்டியும் பெற்றன.

பரிசு

இதனை தொடர்ந்து நடைபெற்ற சிறிய மாட்டு வண்டி பிரிவில் 14 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை கானாடுகாத்தான் சோலை ஆண்டவர் மாட்டு வண்டியும், 2-வது பரிசை சிவகங்கை அருண் மாட்டு வண்டியும், 3-வது பரிசை ஈழக்குடிபட்டி பெரியகருப்பன் யாழினி மாட்டு வண்டியும், 4-வது பரிசை நெய்வாசல் அழகப்பன் மாட்டு வண்டியும் பெற்றன.

இதையடுத்து பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. திருமயம்- மதுரை பைபாஸ் சாலையில் நடைபெற்ற பந்தயத்தை பொதுமக்கள் திரண்டிருந்து கண்டு ரசித்தனர்.

அறந்தாங்கி

அறந்தாங்கி அருகே கூகனூர் கிராமத்தில் உள்ள சிவகாமசுந்தரி சமேத அகத்தீஸ்வரர்கோவில் மண்டலாபிஷேக விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பந்தயம் பெரியமாடு, கரிச்சான்மாடு என இரு பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. போட்டியில் அறந்தாங்கி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட மாடுகள் போட்டியில் பங்கேற்றன. பெரிய மாட்டில் 12 ஜோடி மாட்டு வண்டிகளும், கரிச்சான் மாட்டில் 35 ஜோடி மாட்டு வண்டிகளும் கலந்துகொண்டன. பந்தயத்தில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசும், சிறப்புகோப்பைகளும் வழங்கப்பட்டது.


Next Story