அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பசு சாவு
அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பசு இறந்தது
சிவகங்கை
எஸ்.புதூர் அருகே உள்ள செட்டிகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா(வயது 61) விவசாயி. இவர் நேற்று அதிகாலை வழக்கம் போல் தனது கால்நடைகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்றார். நேற்று முன்தினம் மாலையில் வீசிய காற்றில் மின்சார கம்பி இப்பகுதியில் அறுந்து கிடந்துள்ளது. இதை அறியாமல் கருப்பையா மாட்டை மேய்ச்சலுக்கு ஓட்டி செல்லும் போது கீழே அறுந்து கிடந்த மின்சார கம்பியை பசு மாடு மிதித்தது. அப்போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பசுமாடு பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து அறிந்த மின்வாரிய ஊழியர்கள் அங்கு சென்று மின் இணைப்பை துண்டித்து அறுந்து கிடந்த மின்கம்பியை சரிசெய்தனர்.
Related Tags :
Next Story