மின்சாரம் பாய்ந்து பசு மாடு சாவு
நத்தத்தில் மின்சாரம் பாய்ந்து பசுமாடு இறந்தது.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அவுட்டர் பகுதியை சேர்ந்தவர் ராஜரத்தினம் (வயது54). விவசாயி. இவர் தனது வீட்டில் பசுமாடு வளர்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் வீட்டின் அருகே உள்ள குப்பை கிடங்கில் தனது பசுமாட்டை மேய விட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் பசுமாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்து தகவலறிந்த நத்தம் கிராம நிர்வாக அலுவலர் சுப்புலெட்சுமி மற்றும் கால்நடை உதவி மருத்துவர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் மின்வாரிய அதிகாரிகள் மின்சாரத்தை துண்டித்து மின்கசிவு குறித்து ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story