மின்சாரம் பாய்ந்து பசு-ஆடு பலி


மின்சாரம் பாய்ந்து பசு-ஆடு பலி
x

கறம்பக்குடி அருகே மின்சாரம் பாய்ந்து பசு-ஆடு பலியானது.

புதுக்கோட்டை

கறம்பக்குடி பகுதியில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது கறம்பக்குடி அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தில் நாகராஜ் என்பவரது வீட்டின் அருகே உயர் அழுத்த மின்கம்பியில் உராய்வு ஏற்பட்டதில் தகர கொட்டகை அருகே கட்டப்பட்டிருந்த பசுமாடு மற்றும் ஒரு ஆடு மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தது. இதுதொடர்பாக கறம்பக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story