வரத்து அதிகரிப்பால் மாடுகள் விலை வீழ்ச்சி


வரத்து அதிகரிப்பால் மாடுகள் விலை வீழ்ச்சி
x
திருப்பூர்


குண்டடம் வாரச்சந்தையில் வரத்து அதிகரிப்பு காரணமாக மாடுகள் விலை கடும் வீழ்ச்சியடைந்தது.

குண்டடம் வாரச்சந்தை

குண்டடத்தில் சனிக்கிழமை தோறும் மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை மாட்டுச்சந்தை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சந்தைக்கு குண்டடம், காங்கயம், தாராபுரம், ஊதியூர், மடத்துக்குளம், பல்லடம், பூளவாடி, குடிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் விற்பனைக்காக மாடுகள், வளர்ப்புக் கன்றுகள், காளை கன்றுகளை கொண்டு வருகின்றனர். இதுபோல் ஈரோடு, கோவை, திருப்பூர். பொள்ளாச்சி, கேரளா, ஊட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வந்து அதிகளவில் மாடுகளை வாங்கி வாகனங்களில் ஏற்றிச் செல்கின்றனர்.

விலை வீழ்ச்சி

இதன் காரணமாக வாரம்தோறும் சுமார் 2 ஆயிரம் மாடுகள் இந்த சந்தைக்கு விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றன. ஆனால் பெருமளவு இறைச்சிக்கு செல்லும் மாடுகள் கேரளா, ஊட்டி போன்ற பகுதிகளுக்கு செல்கிறது. ஆனால் தற்போது மாடுகளின் வரத்து அதிகரித்துள்ளதால் இந்தவாரம் விலை கடும் வீழ்ச்சியடைந்தது. அதே நேரத்தில் வளர்ப்பு மாடுகள் மற்றும் கிடேரிகளை வாங்குவோர் எண்ணிக்கு குறைந்துள்ளது. கடந்த வாரங்களில் ரூ.40 ஆயிரம் வரை விலை போன கறவை மாடுகள் இந்த வாரம் ரூ.30 ஆயிரம் வரையே விலைபோனது. ரூ.20ஆயிரம் வரை விலை போன வளர்ப்புக் கிடேரிகள் இந்த வாரம் ரூ.15 ஆயிரத்துக்கு குறைவாகவே விலை போனது.

விரைவில் விலை கூடும்

இதுபற்றி வியாபாரிகள் தரப்பில் கூறும்போது, வழக்கமாக வறட்சி சீசனில் மாடுகள் விலை குறைவாகத்தான் இருக்கும். கார்மழை தொடங்கினால் விரைவில் விலை கூடும் என்றனர்.

1 More update

Next Story