போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகள்
அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகிறாா்கள்.
அதிராம்பட்டினம்;
அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகிறாா்கள்.
போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள்
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை பிரதான போக்குவரத்து சாலையாக இருந்து வருகிறது. இந்த சாலையில் பகல் மட்டுமன்றி இரவிலும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, ராமநாதபுரம், திருச்செந்தூர், போன்ற பகுதிகளுக்கு வாகனங்கள் அடிக்கடி சென்று வருகின்றன. அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி கல்லூரி வாகனங்கள், கனரக வாகனங்கள் முதல் சிறிய ரக வாகனங்கள் வரை இந்த சாலையில் செல்கின்றன.
விபத்து
போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த சாலையில் 100-க்கும் மேற்பட்ட மாடுகள் தினமும் சுற்றித்திரிகின்றன. பகல் நேரங்களை விட, இரவு நேரங்களில் அதிகமாக சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றித்திரிகின்றன. போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் குறுக்கேயும், படுத்தும் மாடுகள் கிடக்கின்றன.இதனால் வாகன ஓட்டிகள் மாடுகள் மீது மோதி விபத்தில் சிக்குகிறார்கள். மேலும் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது. எனவே விபத்து ஏற்படும் முன்பு சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.