தமிழில் எளிய நடையில் செய்திகளை அனைவரிடத்திலும் கொண்டு சேர்த்தவர் சி.பா.ஆதித்தனார் - சசிகலா புகழாரம்


தமிழில் எளிய நடையில் செய்திகளை அனைவரிடத்திலும் கொண்டு சேர்த்தவர் சி.பா.ஆதித்தனார் - சசிகலா புகழாரம்
x

தமிழில் எளிய நடையில் செய்திகளை அனைவரிடத்திலும் கொண்டு சேர்த்தவர் சி.பா.ஆதித்தனார் என சசிகலா புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை,

'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்த நாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. 'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் சென்னை எழும்பூரில் அமைந்துள்ள 'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் 'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனாரின் பிறந்த நாளை முன்னிட்டு வி.கே.சசிகலா தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

பாமரர்களும் நாட்டு நடப்புகளை அறிந்திடும் வகையில், தமிழில் எளிய நடையில் செய்திகளை அனைவரிடத்திலும் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவரும், 'தினத்தந்தி' நாளிதழின் நிறுவனருமான தமிழர் தந்தை திரு. சி.பா. ஆதித்தனார் அவர்களின் 118வது பிறந்த நாளில் அவர்தம் நினைவைப் போற்றுவோம்.

திரு.சி.பா. ஆதித்தனார் அவர்கள் தமிழுக்கும், தமிழக மக்களின் வாழ்வுக்கும் ஆற்றிய பணிகளையும், தன்னலமற்ற சேவைகளையும் எந்நாளும் போற்றிடுவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




Next Story