குமுளி தேசிய நெடுஞ்சாலையில் விரிசல்


குமுளி தேசிய நெடுஞ்சாலையில் விரிசல்
x
தினத்தந்தி 27 Aug 2023 4:30 AM IST (Updated: 27 Aug 2023 4:30 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் லோயர்கேம்ப் புது ரோடு பிரிவு அருகே சாலையில் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைத்துள்ளனர்.

தேனி

கூதிண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டத்தில் கூடலூரில் இருந்து லோயர்கேம்ப் வரையிலான தேசிய நெடுஞ்சாலை, லோயர்கேம்ப் முதல் குமுளி வரையிலான மலைப்பாதையை அகலப்படுத்தும் பணி நடந்தது. மேலும் திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் பிரதான நகர பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகளும் நடைபெற்றது.

இந்நிலையில் கூடலூர்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் லோயர்கேம்ப் புது ரோடு பிரிவு அருகே சாலையில் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளது. இந்த சாலை வழியாக கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு தினமும் ஏராளமான கனரக வாகனங்கள் சென்று வருகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறி வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே தேசிய நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக சேதம் அடைந்த இடத்தை பார்வையிட்டு சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

1 More update

Related Tags :
Next Story