வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு


வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
x
தினத்தந்தி 1 Nov 2022 12:15 AM IST (Updated: 1 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஏரியூரில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தர்மபுரி

ஏரியூரில் நண்பர்கள் கிரிக்கெட் குழுவின் சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி 4 நாட்கள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த 47 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இந்த போட்டிகளில் ஏரியூர் அணி முதல் இடத்தையும், வத்தலாபுரம் அணி 2-ம் இடத்தையும், நெருப்பூர் அணி 3-வது இடத்தையும், பென்னாகரம் அணி 4-வது இடத்தையும் பிடித்தன. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தி.மு.க. மாநில வர்த்தக அணி துணை செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான பி.தர்மசெல்வன் தலைமை தாங்கி முதல் பரிசு ரூ.30 ஆயிரத்தை வழங்கினார். இதேபோன்று 2-ம் பரிசு ரூ.25 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.20 ஆயிரமும், 4-ம் பரிசு ரூ.15 ஆயிரமும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் உமாசங்கர், பொதுக்குழு உறுப்பினர்கள் சோலை மணி, வேலுமணி, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் குமார், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் வைத்தியலிங்கம், முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் சின்னசாமி, முன்னாள் மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் கோவிந்தராஜ், முன்னாள் கவுன்சிலர் முனியப்பன், மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story