கிரிக்கெட் போட்டி
சாயல்குடியில் கிரிக்கெட் போட்டி நடந்தது.
சாயல்குடி,
சாயல்குடியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சாயல்குடி கிரிக்கெட் கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டி நடந்தது. நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராம வளர்ச்சி நல வாரியத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறும்போது, முதுகுளத்தூர் தொகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு வேலை வாய்ப்பு முகாம்கள் வருடம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது. பனை தொழிலாளர்களுக்கு நரிப்பையூர் பகுதியில் ரூ.5 கோடியில் பனை பொருட்கள் அங்காடி அமைய உள்ளது. சாயல்குடி, கடலாடி பகுதி விவசாயிகளுக்காக சங்கரதேவன் கால்வாய் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் தேவைக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் நவாஸ் கனி எம்.பி., மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் வேலுச்சாமி, அமைச்சரின் நேர்முக உதவியாளர் கண்ணன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜெயபாலன், ஆப்பனூர் ஆறுமுகவேல், குலாம் முகைதீன், பூபதி மணி, கோவிந்தராஜ், சாயல்குடி நீர் பாசன சங்க தலைவர் ராஜாராம், ஒன்றிய கவுன்சிலர் பிச்சை ஊராட்சி தலைவர்கள் மங்களசாமி, தென்னரசி செல்ல பாண்டியன், ராஜேந்திரன், ஜெயலட்சுமி வடமலை, ஒன்றிய பொருளாளர் பாலகிருஷ்ணன், சாயல்குடி நகர இளைஞரணி செயலாளர் விக்னேஷ் ராம், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் வஹிதாசகுபர், இளங்கோவன், முதுகுளத்தூர் சட்டமன்ற அலுவலர்கள் சத்தியேந்திரன், டோனி சார்லஸ், ரஞ்சித் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.