கோட்டப்பட்டியில் கிரிக்கெட் போட்டி:வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு; முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் வழங்கினார்
தர்மபுரி
அரூர் ஒன்றியம் கோட்டப்பட்டியில் தி.மு.க. இளைஞரணி சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் கோப்பை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு அரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குபேந்திரன் முன்னிலை வகித்தார். மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினார். அதன்படி முதல் பரிசாக ரூ.30001, 2-ம் பரிசாக ரூ.20001, 3-ம் பரிசாக ரூ.10001 மற்றும் இதர பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணகுமார், ஊராட்சி மன்ற தலைவர் அனுசியா காமராஜ், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் தென்னரசு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தமிழழகன், மாவட்ட சிறுபான்மையினர் அணி அமைப்பாளர் முகமது அலி, முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் ராஜா, கட்சி நிர்வாகிகள் பூசைக்காரன், கோடீஸ்வரன், இந்திரஜித் மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.