இண்டூர் அருகே கருணாநிதி நூற்றாண்டு விழா கிரிக்கெட் போட்டி; தடங்கம் சுப்பிரமணி தொடங்கி வைத்தார்


இண்டூர் அருகே கருணாநிதி நூற்றாண்டு விழா கிரிக்கெட் போட்டி; தடங்கம் சுப்பிரமணி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 10 Jun 2023 1:00 AM IST (Updated: 10 Jun 2023 7:48 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி

நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியம் இண்டூர் கே.சி.சி. கிரிக்கெட் கிளப் சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி கிரிக்கெட் போட்டி கொணப்பள்ளம் கிராமத்தில் நடைபெற்றது. இந்த போட்டிகள் தொடக்க விழாவுக்கு தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்து விளையாடினார். மேற்கு ஒன்றிய செயலாளர் வைகுந்தன் முன்னிலை வகித்தார்.

இந்த நிகழ்ச்சியில் நல்லம்பள்ளி ஒன்றியக்குழு துணை தலைவர் பெரியண்ணன், ஒன்றிய அவைத்தலைவர் வேலு, மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணப்பாளர் கவுதம், மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர் சக்திவேல், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ரவி, கட்சி நிர்வாகிகள் பெருமாள், முனுசாமி, இளங்கவி, உதயகுமார், நீதிபதி, சின்னபையன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story