மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் முள்ளனூரில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகளை தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் தொடங்கி வைத்தார். காரிமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் வரவேற்றார். இந்த போட்டிகளில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான அணிகள் கலந்து கொண்டன. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் வக்கீல் ஆ. மணி, மாநில விவசாய அணி துணை செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி, ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன், கோபால், அன்பழகன், முனியப்பன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் துரை, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஆனந்தன், மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் ஜெயா, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மணல் மாரியப்பன், நிர்வாகி மணிவண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.