பெரம்பலூரில் நாளை கிரிக்கெட் வீரர் தேர்வு போட்டி
பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர் தேர்வு போட்டி நாளை நடக்கிறது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் 14 வயதுக்குட்பட்ட, 16 வயதுக்குட்பட்ட மற்றும் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர்கள் தேர்வு போட்டிகள் பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் கோனேரி பாளையம் அருகே உள்ள மாவட்ட கிரிக்கெட் சங்க மைதானத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இந்த தேர்வு போட்டிகளில் பங்கேற்க 14 வயதுக்குட்பட்டவர்கள் 1-9-2009-க்கு பிறகும், 16 வயதுக்குட்பட்டவர்கள் 1-9-2007-க்கு பிறகும், 19 வயதுக்குட்பட்டவர்கள் 1-9-2004-க்கு பிறகும் பிறந்திருக்க வேண்டும்.
தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் தங்களது பிறப்பு சான்றிதழ் நகலுடன் நாளை காலை 8.30 மணிக்கு மாவட்ட கிரிக்கெட் சங்க மைதானத்திற்கு நேரில் வந்து தேர்வு போட்டிகளில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட கிரிக்கெட் சங்கத்தலைவர் ராமானுஜம் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story