மாவு மில்களில் குற்ற புலனாய்வு துறையினர் சோதனை
மாவு மில்களில் குற்ற புலனாய்வு துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல்துறைத் தலைவர் காமினி உத்தரவின் பேரில், திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதாவின் வழிகாட்டுதலின்படி கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் அரவை ஆலைகள் மற்றும் மாவு மில்களில் தொடர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.
அரசால் பொதுமக்களுக்கு ரேசன் கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசியை முறைகேடாக கால்நடைத் தீவனம் மற்றும் பிற வர்த்தக நோக்கங்களுக்காக மாவாக அரைத்தோ அல்லது குருணையாக உடைத்தோ கொடுப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
எனவே இது தொடர்பான குற்றங்கள் கண்டறியப்பட்டால் கடுமையான சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்களும் இதுபோன்ற குற்றச் செயல்களைப் பற்றிய புகார் தெரிவிக்க கட்டணமில்லா 1800 599 5950 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்கள் பற்றிய விவரம் ரகசியம் காக்கப்படும் என கரூர் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது.