மீன் பிடித்த நபரின் காலை கவ்விய முதலை - கொள்ளிடம் ஆற்றில் அதிர்ச்சி

மீன் பிடித்த நபரின் காலை கவ்விய முதலை - கொள்ளிடம் ஆற்றில் அதிர்ச்சி
x

ஆற்றில் மீன்பிடித்துக்கொண்டிருந்தவரை முதலை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம்,

கும்பகோனம் அருகே அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் 57 வயதான ரவி என்பவர் மீன் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த முதலை ஒன்று, திடீரென அவரது காலை கடித்தது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர், வலியால் அந்த இடத்திலேயெ அலறி துடித்தார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர், ரவியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆற்றில் உள்ள முதலைகளை கண்காணிக்க வனத்துறையினர் நடவடிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆற்றில் மீன்பிடித்துக்கொண்டிருந்தவரை முதலை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story