திருச்சி மேலசிந்தாமணி காவிரி ஆற்றில் முதலை நடமாட்டம்


திருச்சி மேலசிந்தாமணி காவிரி ஆற்றில் முதலை நடமாட்டம்
x

திருச்சி மேலசிந்தாமணி காவிரி ஆற்றில் முதலை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

திருச்சி

திருச்சி மேல சிந்தாமணி அருகே காவிரி ஆற்றுக்குள் முதலை ஒன்று நடமாடுவது போன்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத போதும் அங்கு முதலை நடமாட்டம் இருப்பது போன்ற வீடியோ வைரலாகி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் வீடியோ காட்சி பழையது என்று கூறுகிறார்கள். மேலும் சிலர் கூறும்போது, அங்கு சேறும், சகதியும், ஆழமாகவும் இருப்பதால் அங்குள்ள மறைவிடத்தில் முதலை பதுங்கி விடுகிறது. சில சமயங்களில் முதலை வெளியே வருகிறது. தற்போது ஆற்றில் தண்ணீர் குறைந்துள்ளதால் பொதுமக்கள் அங்கு இறங்கி குளிக்கின்றனர். எனவே முதலையை பிடிக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story