புரட்டாசி மாத பிறப்பு எதிரொலி:உழவர் சந்தைகளில் காய்கறிகள் வாங்க மக்கள் கூட்டம்


புரட்டாசி மாத பிறப்பு எதிரொலி:உழவர் சந்தைகளில் காய்கறிகள் வாங்க மக்கள் கூட்டம்
x

புரட்டாசி மாத பிறப்பு எதிரொலியால் சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் நேற்று காய்கறிகள் வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதேபோல், இறைச்சி கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டது.

சேலம்

சேலம்

புரட்டாசி மாத பிறப்பு எதிரொலியால் சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் நேற்று காய்கறிகள் வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதேபோல், இறைச்சி கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டது.

புரட்டாசி மாதம்

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் வீடுகளில் சிலர் பெருமாளுக்கு படையலிட்டு வழிபாடு நடத்துவதை வழக்கமாக கொணடுள்ளனர். அதேபோல், புரட்டாசி மாதத்தில் பெரும்பாலான மக்கள் அசைவ உணவை தவிர்ப்பார்கள். புரட்டாசி மாதம் தொடங்கிய நாள் முதல் இறைச்சி, மீன் கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டது.

சேலம் மாநகரில் வழக்கமாக வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமையில் இறைச்சி, மீன் கடைகளில் வியாபாரம் களைகட்டும். ஆனால் நேற்று இறைச்சி, மீன் கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டது. பழைய பஸ்நிலையம் அருகே உள்ள கறி மார்க்கெட் மற்றும் குகை, அஸ்தம்பட்டி, சூரமங்கலம், நெத்திமேடு, கிச்சிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள இறைச்சி, மீன் கடைகளில் 50 சதவீதம் விற்பனை மட்டும் நடந்தது.

காய்கறிகள் விற்பனை

இது ஒருபுறம் இருக்க, சேலம் மாநகரில் உள்ள சூரமங்கலம், அஸ்தம்பட்டி, தாதகாப்பட்டி, அம்மாப்பேட்டை உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள உழவர் சந்தைகளில் நேற்று காய்கறிகளை வாங்க பொதுமக்கள் அதிகளவில் வந்திருந்தனர். இதனால் உழவர் சந்தைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. புரட்டாசி மாதம் என்பதால் அசைவ உணவுகளை மக்கள் தவிர்த்து காய்கறிகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். குறிப்பாக காளான் விற்பனையும் அதிகமாக நடந்தது. ஏனென்றால் காளான் உணவு அசைவம் சாப்பிடுவதை போல் இருக்கும் என்பதால் அதனை மக்கள் அதிகளவில் வாங்கி சென்றதை காண முடிந்தது.


Next Story