கூட்டம்


கூட்டம்
x

தேப்பெருமாநல்லூர் அரசு நடுநிலைப்பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.

தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமாநல்லூர் அரசு நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் தலைமை ஆசிரியர் (பொறுப்பு)சாந்தி தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர்-பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் வக்கீல் எஸ். கே. குமரவேல் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பள்ளி மாணவ - மாணவிகளுக்கு விளையாட்டு மைதானம் தேவைப்படுவதை ஊராட்சி மன்ற தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. கூட்டத்தின் தீர்மானங்களை பட்டதாரி ஆசிரியை சி.பரமேஸ்வரி வாசித்தார். இதில் பட்டதாரி ஆசிரியர்கள் ரா.கோவிந்தராஜன், புவனபதி ஆகியோர் பேசினர். முடிவில் இடைநிலை ஆசிரியர் ஆ.சுரேஷ் நன்றி கூறினார்.


Next Story