அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்


அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
x

சேலம் நெய்காரப்பட்டியில் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடந்தது.

சேலம்

பனமரத்துப்பட்டி

ஆலோசனை கூட்டம்

சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வீரபாண்டி தொகுதிக்குட்பட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த 800 நிர்வாகிகளுக்கு சமூக வலைதளத்தை கையாளும் முறைகள் குறித்த பயிற்சி பட்டறை, நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சேலம் நெய்க்காரப்பட்டியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண மஹாலில் நடைபெற்றது. சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோவன் தலைமை தாங்கினார்.

வீரபாண்டி ராஜமுத்து எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார். சந்திரசேகரன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மணி, ஜெய்சங்கரன், நல்லதம்பி, முன்னாள் எம்.எல்.ஏ. மனோன்மணி, மாவட்ட மாணவரணி செயலாளர் தமிழ்மணி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜெயகாந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தி.மு.க.வின் தவறுகள்

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோவன் பேசுகையில், தி.மு.க. அரசு 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று பேசினார். இதையடுத்து மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ்சத்யன், மாநில இணைச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் பங்கேற்று தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் சமூகவலைளம் மூலம் மக்களை தொடர்பு கொள்ள வேண்டும். தி.மு.க. செய்கிற தவறுகளை பதிவிட வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்களை வரிசைப்படுத்தி போட வேண்டும் என்று பேசினர்.

கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் பனமரத்துப்பட்டி மேற்கு ஜெகநாதன், பனமரத்துப்பட்டி கிழக்கு பாலச்சந்திரன், வீரபாண்டி மேற்கு வருதராஜ், வீரபாண்டி கிழக்கு வெங்கடேசன், சேலம் கிழக்கு வையாபுரி மற்றும் ஒன்றிய, பேரூர் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story