ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம்


ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம்
x

நாமக்கல்லில் ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம் கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடந்தது.

நாமக்கல்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான ஆதிதிராவிடர் நலக்குழுவின் முதல் காலாண்டு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத்திட்டங்கள் மற்றும் ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதிகளின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்களின் கோரிக்கைகளை கலெக்டர் கேட்டறிந்தார்.

அதைத்தொடர்ந்து இயன் முறையில் மனித கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நடந்தது. அதில் நகராட்சி பேரூராட்சி மற்றும் கிராமப்புறங்களில் இயன் முறையில் மனித கழிவுகளை அகற்றும் பணியாளர்கள் எவரும் இல்லை என்பதை கண்டறிவது, மனித கழிவுகளை அகற்றும் பணிக்கு பணியாளர்களை பணியமர்த்துவதை தவிர்த்தல், மனித கழிவுகளை அகற்றும் பணியாளர்களின் மறுவாழ்வு சட்டத்தின் கீழ் பணியாளர்களின் பொருளாதார நிலை மற்றும் சமூக மறுவாழ்வு குறித்து ஆராய்தல், சட்டத்திற்கு புறம்பாக மனித கழிவுகளை அகற்றும் பணியில் எவரேனும் ஈடுபடுத்தப்படுவது குறித்தோ, அல்லது அவர்களுக்கு எதிரான சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர் குறித்தோ எழுந்த புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சுகந்தி மற்றும் நலக்குழு உறுப்பினர்கள், அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story